இறந்து விடுவார் என அறியப்பட்ட முதியவர் திடீரென உயிர்பிழைத்து பேசிய அதிசயம் புதுக்கோட்ட முரண்பட்டியில் நிகழ்ந்துள்ளது.
ஒருவர் இறந்துவிடுவார் அல்லது இறந்துவிட்டார் என தவறுதலாக எண்ணி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் திடீரென ஓர் அதிசயம் நிகழ்ந்து அவர்கள் எழுந்து விடுவார்கள். அப்படி ஒரு அதிசயம் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் உடல் நலகுறைவால் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார்.
அப்போது இவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியதன் காரணமாக அவர் இறந்துவிடுவார் என கருதி குடும்பத்தினர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் இறுதி மூச்சிருக்கும் வரை சொந்த ஊரில் இருக்கட்டும் என முரண்டாம்பட்டிஅழைத்து வந்துள்ளனர்.
அவர் ஆம்புலன்சில் வரும் போதே சண்முகம் இறந்து விட்டார். அவரது உடல் தான் அடக்கம் செய்ய எடுத்து வரப்படுவதாக உறவினர்கள் தவறாக எண்ணி வைக்கோல்களை கொளுத்தி இறுதி சடங்குகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அடுத்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சண்முகத்திற்கு அவரது மகன் பால் ஊற்றியுள்ளார். அப்போது சண்முகத்தின் மகன், திடீரென சாமியாடி, தனது தந்தை பிழைத்துக்கொள்வார் என கூறியுள்ளார். இந்த நேரத்தில் தான் சண்முகத்தின் உடல்நிலை சரியாகி அவர் பேசவும் தொடங்கியுள்ளார். இந்த செய்தி அப்பகுதியில் அதிசயமாக பேசப்பட்டு வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…