முதலமைச்சர் முன்னிலையில் சிங்கப்பூர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

mk stalin Singapore

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த Hi-P இண்டர்நேஷ்னல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருவதற்காக அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார்.

இதில் முதற்கட்டமாக சென்னையில் இருந்து நேற்று காலையில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர். மேலும், சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, சிங்கப்பூர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதில், சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம், தமிழ்நாடு சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த Hi-P இண்டர்நேஷ்னல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷ்னல், தமிழ்நாட்டில் ரூ.312 கோடி முதலீடு செய்யவுள்ளது. இந்த முதலீடு மூலம் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றுள்ளனர். மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவை நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுபோன்று, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்