தூத்துக்குடியில் 62 போலீசாருக்கு “மெமோ” .!
தூத்துக்குடி மாவட்டத்தில் விதி முறைகள் மீறியதாக 62 போலீசாருக்கு மெமோ வழங்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் வேலை, 7 நாட்கள் ஓய்வு வழங்கபடுகிறது.
ஓய்வின்போது அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயோ அல்லது தங்கு மிடத்திற்குள்ளேயோ இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவர்களின் கண்காணிப்பு ஒவ்வொரு சப்- டிவிசனுக்கும் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் போலீசார், சிறப்பு எஸ்ஐகள், எஸ்ஐகள் என பலரும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும், பைக்குகளில் சென்று வந்துள்ளனர். இது உயரதிகாரிகளின் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதனால் விதி முறைகளை மீறி வெளியே சென்று வந்த போலீசாருக்கு அதிகாரிகள் மெமோ வழங்கி உள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் விதி முறைகள் மீறியதாக 62 போலீசாருக்கு மெமோ வழங்கபட்டுள்ளது.