விஜயகாந்த் தலைமையில் வரும் 14ம் தேதி தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்!

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 14-ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் . வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் உள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் நடைபெற்றது. வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. உடல்நிலை பாதிப்புக்கு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும்  விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

மிக்ஜாம் நிவாரணம் : ரூ.6000 ரொக்கம் ஏன்.? எப்போது டோக்கன்.? அமைச்சர் விளக்கம்.!

இந்த சூழல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், விஜயகாந்துக்கு சளி, மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக சுமார் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது குணமடைந்ததால் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், வரும் 14ம் தேதி வியாழக்கிழமை தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், வரும் 14ம் தேதி காலை 8.45 மணிக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்,  பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்