அதிமுக ஆலோசனை கூட்டம்.! நிர்வாகிகளுக்கு இபிஎஸ் விதித்த ‘முக்கிய’ கட்டளைகள்… 

ADMK Chief Secretary Edappadi Palaniswami

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..!

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி கூறினார். அதில், தற்போது வாக்காளர்கள் பட்டியலில் நிறைய குளறுபடி உள்ளது. ஆளும் திமுக கட்சி வேண்டுமென்றே சில குளறுபடிகளை செய்து அதிமுக வாக்குகளை சிதைக்க பார்க்கிறது. அதனால் மாவட்ட செயலாளர்கள் வாக்காளர்கள் இறுதி பட்டியலை கண்ணும் கருத்துமாக ஆய்வு செய்து அதனை தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக கூறினார்.

மேலும், வரும் ஜனவரி 17ஆம் தேதி புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் விழாக்கள் பற்றியும், அடுத்து புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா ) பிறந்தநாள் விழாவிலும் செய்ய வேண்டிய நலத்திட்ட விழாக்கள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம் என்று குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டங்கள் நடத்தி அதிமுக அரசின் சாதனைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார் என்றும், தற்போது தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. விலைவாசி, வரி ஆகியவை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டியது கட்டாயம் என நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price