அதிமுகவின் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் வாரும் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேரடையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவை அதிமுக கழட்டிவிட்டது. இதன்பின் இரு தலைவர்களும் மவுனம் காத்து வந்ததால், மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம் என அதிமுக தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல், அதிமுக தலைமையில் ஊதிய கூட்டணி அமைத்து மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டணி முறிவை தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். மறுபக்கம், கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்கள் விருப்பம், இனி பாஜக – திமுக தான் என மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதுபோன்று, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில், வரும் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…