பாஜக தலைமையகத்தில் பொறுப்பாளர்கள் கூட்டம்..!

BJP

அதிமுக-பாஜக முறிவுக்கு பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்ற நிலையில், அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில், இன்று சென்னையில்  பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து இன்னும் சென்னை திரும்பாததால், இந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் இன்று பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக தலைமையகமான கமலாலயத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கரு.நாகராஜன், வினோத் செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ரீதியாக கட்சி எவ்வாறு பலப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்