ஓபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம்.. நிறைவேற்றப்பட உள்ள முக்கிய தீர்மானங்கள்?
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு.
அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட தொடங்கியதுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அதாவது, ஓபிஎஸ் தனி அணியாக தொடங்கிய பிறகு தனது ஆதரவாளர்களை, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளாக நியமித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், அதிமுக கட்சி ஒன்றிணைய வேண்டும், அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான், பொதுக்குழுவை கூட்டி பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யும் தீர்மானம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தில் போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.