சென்னையில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது

சென்னையில் இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு துவங்கி உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதியே எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் 18ஆம் தேதி முதல் நேற்று வரையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. வருகிற 23-ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025