தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து; ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்!

fire accident

கோவில்பட்டி அருகே சித்தரம்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சித்தரம்பட்டியில் பகுதியில் ராமசாமி என்பவரது தீப்பெட்டி அலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி குச்சி அரவை பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.

மேலும், இந்த தீ விபத்தில் சித்தரம்பட்டியை சேர்ந்த கனகலட்சுமி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக அப்பகுதி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்