வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற நபர் பாம்பு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (35). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகாமையில், உள்ள வீட்டில் அடிக்கடி விஷபாம்புகள் வந்து போவதால், இவர் தனது கடைக்குள் வராமல் இருப்பதற்காக, வலை ஒன்றை அமைத்துள்ளார்.
இன்று காலை அந்த வலையினுள், 6 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. இதனையடுத்து, வலையினுள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பை மீட்க ராஜசேகர் முயற்சித்துள்ளார். பாம்பை மீட்க முயன்ற ராஜசேகரை அந்த பாம்பு கடித்துள்ளது. அது கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பதால், விஷம் ராஜசேகரின் உடல் முழுவதும் பரவியுள்ளது.
இதனையடுத்து, அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…