சொல்ல சொல்ல கேட்காமல் பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! கணவர் செய்த காரியம்.!

Default Image
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்ததுள்ளார்.
  • பாலியல் தொல்லை அளித்ததால் கணவன், மனைவி மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்துக்கு தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணையில், ராமரின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது உறவினரான கலியமூர்த்தியின் மனைவி கனகாவிற்கு ராமர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக கலியமூர்த்தி ராமரை மிரட்டியதாகவும், தெரிய வந்தது. ஆனால் ராமரை மிரட்டியும், தொடர்ந்து கனகாவிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, அவருடைய மனைவி கனகா மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்கள். இது குறித்து போலீசார் அந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்