தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ள வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் யானை ஒன்று இன்று காலையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த ஒருவர் யானையை பார்த்ததும் கையை எடுத்து கும்பிட்டு யானை கிட்ட சென்று தொந்தரவு செய்தார்.
இதனால் அந்த யானை அவரை தாக்கவும் முற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், வீடியோவை பார்த்த வனத்துறையினர், சம்பந்தப்பட்ட நபரை வீடியோவை வைத்து தேடி விசாரணை நடத்தினார்கள்.
இதனையடுத்து, அந்த நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த மீசை முருகேசன் என்பவர் என்றும், அவர் யானையை சொந்தரவு செய்யும்போது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், மீசை முருகேசனுக்கு 10,000 அபராதம் விதித்ததுடன் அவரிடம் இருந்த 2 இரு சக்கர வாகனகங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…