போதையில் யானையை தொந்தரவு செய்த நபர்…வைரலான வீடியோவால் கைது.!!

elephant

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ள வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் யானை ஒன்று இன்று காலையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த ஒருவர் யானையை பார்த்ததும் கையை எடுத்து கும்பிட்டு யானை கிட்ட சென்று தொந்தரவு செய்தார்.

இதனால் அந்த யானை அவரை தாக்கவும் முற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், வீடியோவை பார்த்த வனத்துறையினர், சம்பந்தப்பட்ட நபரை வீடியோவை வைத்து  தேடி விசாரணை நடத்தினார்கள்.

இதனையடுத்து, அந்த நபரை  வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த மீசை முருகேசன் என்பவர் என்றும், அவர் யானையை சொந்தரவு செய்யும்போது போதையில் இருந்தது தெரியவந்தது.  மேலும், மீசை முருகேசனுக்கு 10,000 அபராதம் விதித்ததுடன் அவரிடம் இருந்த 2 இரு சக்கர வாகனகங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்