ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருட்டு.! மேலும் ஒருவர் கைது.! அடகு வைத்ததால் மாட்டிக்கொண்ட நபர்.!
ஐஸ்வய்ரா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை அடகு பெற்று கொண்டதாக மயிலாப்பூரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடுபோனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
நகைகள் மீட்பு :
இந்த விசாரணையை அடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலைபார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணும் , ஓட்டுநர் வெங்கடேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், விலையுயர்ந்த வைர கற்கள், அதன் மூலம் வாங்கிய வீட்டு பத்திரம் ஆகியவை மீட்கப்பட்டன.
திருட்டு நகை அடகு :
அதனை தொடர்ந்து, தற்போது திருடப்பட்ட நகைகளில் 340 கிராம் நகைகளை ஈஸ்வரி அடகு வைத்துள்ளார். அந்த நகைகளை அடகு பெற்றுக்கொண்டதாக மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த வினால்க் சங்கர் நாவலி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.