சிகிச்சைக்கு வந்த மெக்கானிக் மர்மனான முறையில் எஸ்ரே ரூமில் மரணம்.. கதறிய மனைவி..!

Default Image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இவர் தனது மனைவி கீதாவுடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு டீ வாங்குவதற்காக அவரது மனைவி கீதா வெளியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்ததும், அவரது கணவர் மணிகண்டனை காணவில்லை.

மருத்துவமனையைச் சுற்றி கீதா மணிகண்டனை தேடி வந்தார். அப்பொழுது அங்கு வேலை பார்க்கும் அலுவலர் ஒருவர், எஸ்ரே ரூமில் ஒருவர் இறந்து கிடப்பதாக மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் கீதாவிடம் கூற அங்கு சென்ற பார்த்த கீதா, இறந்து கிடப்பது தனது கணவர் மணிகண்டன் என கூறினாள்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains