புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளையோ அல்லது உயர்நீதிமன்ற அமர்வு நிச்சயம் அமைத்து தரப்படும். – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதியளித்தார்.
புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசுகையில், நீதிமன்றத்தில் அதிக நேரத்தை மக்கள் செலவிடக் கூடாது. மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க செய்வது முக்கியம். அதற்கான உதவிகளை அரசு செய்யும். மேலும், புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளையோ அல்லது உயர்நீதிமன்ற அமர்வு நிச்சயம் அமைத்து தரப்படும் எனவும் அமைச்சர் கிரண் ரிஜிஜூ அந்த நிகழ்ச்சியில் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரசு வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…