Heavy Rain: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனையடுத்து, இது 21-ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நேற்று முன் தினம் ஆரஞ் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரபிக்கடல்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025