வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…வானிலை மையம் தகவல்.!!
தமிழகத்தில் கோடை மழை பல இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் ” கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
60 இடங்களில் கனமழை, 11 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “வரும் மே 6-ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும், நீலகிரி, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவி (கடலூர்) 19, சங்கரி துர்கம் (சேலம்) 17, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 15, சாத்தூர் (விருதுநகர்) 14, திருச்செங்கோடு (நாமக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) . நந்தியாறு (திருச்சி) தலா 13, எடப்பாடி (சேலம்), சின்கோனா (கோயம்புத்தூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 12, புடலூர் (தஞ்சாவூர்), காஞ்சிபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), கடலூர், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), எண்ணூர் AWS (திருவள்ளூர்) தலா 11 என மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.