உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி? நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டணைகளில் கனமழை பெய்து வந்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியை ஒட்டி உருவான ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 23-ம் தேதி அதாவது நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் உள்ள ஒரு சில பகுதிகளில் நாளை மற்றும் மறுநாள் (25 மற்றும் 26 ஆம் தேதிகளில்) மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.