இன்னும் ஓரிரு நாளில் அறிக்கை ஒன்று வரும்… ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய செய்தி.!

Default Image

2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிறைய அதிசயங்கள் நடக்கும். – ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. 

நேற்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதனால் இபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் இருக்கின்றனர்.

தீர்ப்பு : இது குறித்து ஓபிஎஸ் தரப்பில் இந்த பொதுக்குழு மட்டுமே செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியதாகவும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி எதுவும் கூறவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். மேலும், மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஜெயலலிதா பிறந்தநாள் : நேற்று இரவு சென்னையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் , நாளை (இன்று) ஜெயலலிதா பிறந்தாளை முன்னிட்டு ஏற்பாடு செய்து வருவதாக குறிப்பிட்டார்.

அதிசயம் : மேலும் பேசுகையில், இன்னும் ஓரிரு நாளில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து ஒரு அறிக்கை வரும். அதற்க்கு அப்புறம் பாருங்க என கூறினார். அடுத்து , உச்சநீதிமன்ற தீர்ப்பில் முழுதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்குள் எடப்பாடியர் தரப்பு கொண்டாடுகின்றனர். என குறிப்பிட்ட அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிறைய அதிசயங்கள் நடக்கும் எனவும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO