“வரலாற்றை புரட்டி பாருங்கள்., இது ஆண்ட பரம்பரை” அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு!
பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட பரம்பரை என மதுரையில் ஒரு நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
மதுரை : அமைச்சர் மூர்த்தி அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பிட்ட சமுதாய மக்களை உயர்த்தி கூறும் வகையில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அவர் பேசுகையில், இது ஆண்ட பரம்பரை என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது படித்திருக்கிறீர்க்ள். மற்ற சமூகத்தில், 4 பேர் உயிரிழந்தனர், 2 பேர் உயிரிழந்தனர் என்பதை பெரிதாக பேசுகிறார்கள். ஆனால், சுதந்திரத்திற்காக 5 ஆயிரம் 10ஆயிரம் பேர் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் எனற வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து செல்வதை தடுக்க இந்த சமுதாயத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். உசிலம்பட்டியில் கூட 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நமது சமுதாயத்தில் போதிய படிப்பறிவு அப்போது இல்லாத காரணத்தால் நமது வரலாறுகளை வெளியே கொண்டுவரடியாத சூழல் இருந்தது. தற்போது பலரும் படித்து அரசு வேலை வாய்ப்பில் பலரும் சேர்ந்து கொண்டிருப்பதை நான் பாராட்டுகிறேன்” என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
அமைச்சர் மூர்த்தி அவர் சார்ந்த சமுதாயம் பற்றி பேசினாரோ? அல்லது வேறு சமுதாயத்தை பற்றி பேசினாரா எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி மற்ற சமூகத்தை விமர்சித்து பேசுவது என்பது விமர்சனத்திற்குரியது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.