தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! எப்போது.? எதற்காக.?
தூத்துக்குடி பனிமய மாதா 10ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா கோவில் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும்.
அதற்காக , இன்று கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா ஆரம்பமானது. இந்த திருவிழாவை காண, ஜாதி, மத பேதமின்றி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்வர்.
திருவிழாவின் கடைசி நாளான 10ஆம் நாள் வெகு விமர்சையாக இருக்கும். அதனை முன்னிட்டு , வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி 10ஆம் நாள் திருவிழா அன்று வழக்கம் போல இந்த வருடமும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தொழிலார்களுக்கு இது பொருந்தாது. மேலும், ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை என்பதால், இரண்டாம் சனிக்கிழமையான 13ஆம் தேதி அலுவலக நாளாகும்.