சென்னை:53-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இதற்கிடையில்,மத்திய அரசின் கலால் வரி குறைப்பால்,தீபாவளிக்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது.எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது.இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது. இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.53-வது நாளாக மாற்றமில்லாமல் ஒரே விலையிலேயே பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…