இவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்!
உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. iஇதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.