மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் உடை அணிந்து லஞ்சம் வாங்குவது போல நூதன போராட்டம் செய்த வக்கீல் !
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப் பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு டூவிபுரம் 7-வது தெருவை சார்ந்த வக்கீல் தொண்டன் சுப்பிரமணி வந்து உள்ளார்.இந்த கூட்டத்திற்கு போலீசார் உடையில் வந்தார். அப்போது தனது கார் டிரைவரை மறித்து லஞ்சம் வாங்குவது போல நூதன முறையில் போராட்டம் செய்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொண்டன் சுப்பிரமணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியை கண்டித்து அனுப்பி வைத்தனர்.இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் கேட்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.