இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர்.
அசுர சக்திகளை வீழ்த்த முருகன் தோன்றிய தினம் தான் வைகாசி விசாகமாக ஆண்டு தோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த வைகாசி விசாகமானது திருச்செந்தூர் சுப்ரமணியன் கோவிலில் (முருகன் கோவில்) பக்தர்கள் மத்தியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.
இந்த வைகாசி தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடந்தே செல்வது வழக்கம். தூத்துக்குடியில் இருந்து மட்டுமல்லாது தென்தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல நாட்கள் நடந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள்.
இன்று வைகாசி விசாக திருவிழாஎன்பதால் , நேற்று மாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதை யாத்திரையாக திருச்செந்தூர் புறப்பட்டனர். வழிநெடுகிலும், பக்தர்கள் இளைப்பாற தன்னார்வலர்கள் தண்ணீர், குளிர்பானம், நீர் ஆகாரம், உணவு என கொடுத்து வந்தனர். இன்று திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…