இந்தியாவில் இதுவே முதல் முறை.. சென்னை அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு சூப்பரான ஆய்வகம் திறப்பு.!
வானவில் மன்றத்தின் கீழ் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சிக்கான ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
வானவில் மன்றம் : அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவை எளிதில் புரியும் வண்ணமும், அதில் அவர்களது திறமையை, ஆர்வத்தை மேற்கொண்டு வரும் நோக்கிலும் கடந்த 2022-2023ஆம் ஆண்டு கல்வியாண்டில் ‘வானவில் மன்றம்’ எனும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அறிவியல் ஆய்வகங்கள் : இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் பயம்பெரும் வகையில் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை எளிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வகையில் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு அவை மாணவர்களின் காட்சிக்கு சுழற்சி முறையில் அரசு பள்ளிகளில் வைக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித திறன்கள் மேம்படும்.
தொழில்நுட்ப பயிற்சி ஆய்வகம் : இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சிக்கான ஆய்வகம் ‘வானவில் மன்றம்’ எனும் திட்டத்தின் கீழ் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகமானது ‘அமெரிக்கன் இந்தியா’ எனும் அறக்கட்டளையின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதை வைத்து அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.