கர்நாடகாவுக்கு ஒரு நியாயம் ? தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயமா?” – துரை வைகோ கேள்வி
கோவை குண்டுவெடிப்பு குறித்து அண்ணாமலையின் கருத்து குறித்து துரை வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக தலைவர் அண்ணாமலை கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயல் என போலீசார் கண்டுபிடித்த நிலையில் தமிழக அரசின் உளவுத்துறை கவன குறைவு காரணமாக தான் இவ்வாறு நடந்தது என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஏற்கனவே அதே மாநிலத்தில் ஒத்திகையும் பார்த்துள்ளார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் கலவரம் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளார். இந்த கலவரத்தில் ஈடுபட்டவர் மீது பாஜக ஆளும் கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக எந்த ஒரு கேள்வியும் கேட்பதில்லை. தமிழக அரசு என்று வந்தால் ஒரு நியாயம்? கர்நாடக அரசுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அண்ணாமலை ஊழல் குறித்து பேசுகிறார். குஜராத் மாநிலம் தொங்கு பாலம் அருந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்தனர். அதிலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் இந்நாள் வரைக்கும் அது தொடர்பான நபர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் வன்முறை தலைமுடித்து ஆடுகிறது சரியாக செயல்படவில்லை என்றும் பாஜக அரசு குற்றம் சாட்டி வருகிறது. கர்நாடகா மற்றும் குஜராத்தில் நடந்ததற்கு அண்ணாமலை என்ன சொல்லப் போகிறார். பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும். ஒன்றை பத்தாக திரித்து சொல்லக்கூடாது. கண்ணாடி கூட்டில் நின்று கல்லெறிய கூடாது என்று அவர் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.