கருணாநிதிக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? கருணாநிதியை போன்று தான் நான் முதல்வரானேன் – முதல்வர் பழனிசாமி
அண்ணா இறந்த போது, எப்படி கருணாநிதி முதல்வரானாரோ, அதே போன்று, புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின் நான் முதல்வரானேன்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் எப்படி முதல்வரானேன் என்று எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அண்ணா இறந்த போது, எப்படி கருணாநிதி முதல்வரானாரோ, அதே போன்று, புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின் நான் முதல்வரானேன். கருணாநிதிக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? அண்ணா இருந்த போது அவரை நம்பி மக்கள் ஒட்டு போட்டனர். அவரது மறைவிற்க்கு பின் கருணாநிதியை தேர்ந்தெடுத்தார்கள். அதே போல் தான் ஜெயலலிதா மறைவிற்கு தற்போது என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.