என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

Published by
மணிகண்டன்

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.

கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், வழக்கறிஞர் அமைப்புகள் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றன.

ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சட்டதிருத்தத்தின் படி, இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC) பாரதிய நியாய சங்கிதா (BNS) எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை(CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சங்கிதா (BNSS), எனவும், இந்திய ஆதாரச்சட்டத்தை (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) எனவும் இந்தியில் பெயர் திருத்தம் செய்து அதில் குறிப்பிட்ட மாற்றங்களையும் செய்துள்ளனர்.

இந்த புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், புதிய குற்றவியல் சட்டத்தின் பெயரை படித்து விட்டு, “என்னது சங்கீதாவா.? ” என பாரதிய நியாய சங்கிதா சட்டத்தின் பெயரை படித்துவிட்டு, ” இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம் என்று ஆதிகாலத்தில் இருந்து சொல்கிறோம்.”  என விமர்சனம் செய்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியை நேரடியாக திணித்தால் எதிர்ப்போம் என தெரிந்து, சட்டத்துறையில் தற்போது லேசாக திணித்துள்ளனர். பெயரில் மட்டுமல்லாது அதில் சில திருத்தங்களையும் செய்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றத்தில் இந்தி பெயரை உச்சரிக்க வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் இந்தி பழக்கமாகிவிடும். அதற்காக தான் இந்த பெயர் மாற்றம். நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டத்தை சட்டத்திருத்தம் என்று பெயரில் திணிக்க பார்க்கிறார்கள்.

இதனை எதிர்த்து முதலில் குரல் எழுப்ப வேண்டியவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும். அவர் தான் இதனை ஆரம்பத்தில் அவர்களே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இதனை உச்சநீதிமன்றம் குப்பை தொட்டியில் வீசியிருக்க வேண்டும். இது ஒரு சர்வாதிகார போக்கு என்று அமைச்சர் துரைமுருகன் உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

39 minutes ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

1 hour ago

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

2 hours ago

சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!

பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…

2 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் ஜில் அலர்ட்!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…

3 hours ago

மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா! எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள்!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…

3 hours ago