பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் இணையம் வாயிலாக பிரமாண்ட கலைநிகழ்ச்சி நடத்தப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Default Image

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் சென்னையில் இணையம் வாயிலாக பிரம்மாண்ட விழாவாக நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று ஆண்டுதோறும் சென்னையில் இணையம் வாயிலாக பிரம்மாண்ட கலை விழா நடத்தப்படும் என்றும், சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தொல்லியல் நிறுவனம் என்ற பெயர் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் கண்காட்சியகவியல் நிறுவனம் என பெயர் மாற்றப்படும் எனவும், கடந்த திமுக ஆட்சியின் போது நடத்தப்பட்ட ‘சென்னையில் சங்கமம்’ போன்று மூன்று நாள் பாரம்பரிய கலைகளை அரங்கேற்று நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கீழடி அகழ் வைப்பகத்திற்கு தேவையான 34 நிரந்தர பணியிடங்கள் ரூ.1.50 கோடியில் ஏற்படுத்தப்படும் என்றும், தருமபுரி பெரும்பாலை உள்பட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு, களஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்