நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி..!
இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.
நவம்பர் 01 – தமிழ்நாடு நாளான இன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து, மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்ததாவுல்லாது.
நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரங்கள் வாகனங்களில் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, நிதானமாக வாகனங்களில் பயணித்து வரவேண்டுமென சீமான் அறிவுறுத்தியுள்ளார்.