தொடரும் கனமழை.! வால்பாறை தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
தொடரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டு இருந்தது.
நேற்று கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றும் அப்பகுதியில் கனமழை தொடர்வதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியினர் உத்தரவிட்டுள்ளார்.