ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை ? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நாளை மறுநாளும் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.