வேட்புமனு தாக்கலின்போது கடும் வாக்குவாதம்… நடந்தது என்ன? திமுக – அதிமுக விளக்கம்!

d jayakumar

DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

வேட்பாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோரும், திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். அப்போது, இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது, வேட்பு மனுவை தாக்கல் செய்ய திமுகவிற்கு 2 ம் நம்பர் டோக்கனும், அதிமுகவுக்கு 7ம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது.

இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம், அதனால் நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜெயக்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் குறிப்பாக அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் சேகர்பாபு ஆகிய இருவரும் ஒருமையில் பேசிக்கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வாக்குவததால் வேட்புமனு பெறுவது நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் இருவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். முதலில் சுயேட்சை வேட்பாளரிடம் வேட்பு மனுவை வாங்கியபிறகு டோக்கன் அடிப்படையில் வேட்பு மனுவை பெறுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதை இருதரப்பு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, வேட்புமனு தாக்கல் செய்ய எங்களுக்கு 12-12.30 மணி வரை நேரம் ஒதுக்கினார்கள். நாங்கள் 12.15 மணிக்கு வந்தோம். எங்களது வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால் வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு செய்தனர் என விளக்கமளித்தார்.

இதுபோன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, திமுக வேட்பாளரின் டோக்கன் எண் 8, எங்கள் டோக்கன் எண் 7. மரபை பின்பற்றாமல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் திமுகவினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், திமுகவினர் செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதிகாரிகளை திமுகவினர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay