சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.! ஒரு தரப்பு உடன்பாடு., சி.ஐ.டி.யு ஏற்க மறுப்பு.!

போராட்டத்தில் ஈடுப்பட்ட சாம்சங் ஊழியர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டினர். மற்றொரு தரப்பினர் போராட்டத்தை தொடர்கின்றனர்.

Samsung Workers - Tamilnadu Ministers meeting

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 25 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று, அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை அடுத்து, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் முதலில் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பிறகு நேற்று தலைமை செயலகத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதில், சாம்சங் நிறுவனம் சார்பில் கூறப்பட்ட, ரூ.5 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை இம்மாதம் முதல் மார்ச் 2025 வரை வழங்கப்படும், ஏ.சி பேருந்து வழித்தடங்கள் அடுத்த ஓராண்டில் 5இல் இருந்து 108ஆக உயர்த்தப்படும், வீட்டு விழாக்களுக்கான விடுமுறை 4இல் இருந்து 8 நாட்களாக உயர்த்தப்படும், ஊழியர்களின் வீட்டு விசேஷங்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுத்தொகை அல்லது பரிசுப் பணம் வழங்கப்படும், ஊழியர்கள் உயிரிழந்துவிட்டால் இறுதிசடங்குகளுக்கு உடனடி செலவுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட சலுகைகளை ஊழியர்களிடம் அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.

இதனை போராட்டத்தில் ஈடுபடும் ஒருதரப்பு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஆனால், சிடிடியு தொழிற்சங்க போராட்ட குழுவினர் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றுக் கூறி தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்