பயிர் சேதங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு தலைமைச்செயலகத்தில் முதலமைச்சருடன் சந்திப்பு..!
டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு தலைமைச்செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை
தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் பயிர்சேதங்களை பார்வையிட்டனர்.
இந்த நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு தலைமைச்செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவது, இழப்பீடு வழங்குவது குறித்தும், உரிய மேல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.