கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணை கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவர் குழு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்த மிக தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அரியலூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 28 நாட்கள் சிகிச்சைக்கு பெற்று வந்தார். தற்போது இவர் பரிபூரண குணமடைந்ததாக மருத்துவர் குழு தெரிவித்துள்ள நிலையில், அவரை உற்சாகப்படுத்தும் விதமாக மருத்துவர்கள் கைகளை தட்டி வழியனுப்பி வைத்துள்ளனர்.