ஓபிஎஸ் மாநாட்டில் சவர்மா.! தொண்டர்களுக்கு பிரம்மாண்ட விருந்து ஏற்பாடு.!
ஓபிஎஸ் தலைமையில் இன்று நடைபெறும் திருச்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு வகை வகையான விருந்து ஏற்பாடு.
ஓபிஎஸ் மாநாடு
அதிமுக-வில் இருந்து தன்னை வெளியேற்றியபின் கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவை வெளிகாட்ட ஓபிஎஸ் தலைமையில் இன்று திருச்சியில் உள்ள ‘ஜி கார்னர்’ மைதானத்தில் மாலை 5 மணிக்கு ஒபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு நடக்கிறது.
விருந்து ஏற்பாடு:
இந்த மாநாட்டிற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என ஓபிஎஸ் தரப்பினர் கணித்துள்ளதால், அவர்களுக்கு வகை, வகையான சாப்பாடு தயாராகி வருகிறது.
அதிலும், தொண்டர்களுக்காக சாப்பாட்டுடன் சவர்மா என்ற ஸ்பெஷல் டிஸ் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், பிரியாணி வகைகளும் தயாராகி வருகிறதாம்.
பிரம்மாண்ட மாநாடு:
மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம் அதிமுகவின் தலைமை அலுவலகம் போன்று வடிவமைப்பு மற்றும் நிகழ்வுகளை தொண்டர்கள் பார்வையிட, பல்வேறு இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.