ளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல. இது ஒரு அலங்கார பதவி மட்டுமே. என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் ஜி.கே.வாசன் பேச்சு.
இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து முக்கிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். அதன் மீதான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை :
அதன் பிறகு இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார்.
அண்ணல் அம்பேத்கர் :
அடுத்து அவர் பேசுகையில், ஆளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல. இது ஒரு அலங்கார பதவி மட்டுமே. என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் என பேசினார்.
சட்ட மசோதா :
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், கூடங்குளம், அணு உலை, ஸ்டெர்லைட் பிரச்சனை என்று தேவையற்ற பிரச்னைகளை பற்றி பேசி தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநரின் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். ஒரு சட்ட மசோதாவை காலம் தாழ்த்தி திருப்பி அனுப்புகிறார். மீண்டும் ஒருமனதாக ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சேர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனுப்பினால் அதனையும் கையெழுத்திடாமல் வைத்துள்ளார் என ஆளுநர் செயல்பாடு குறித்த தீர்மானம் குறித்து ஜி.கே.மணி சட்டப்பேரவையில் பேசினார்.
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…