டிக்கெட் மறுவிற்பனை… மாட்டிக்கொண்ட நடத்துனர்.! சிக்கியது எப்படி.?
பயணிகள் யாரேனும் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கிறார்களா என்பதை கண்காணித்து டிக்கெட் எடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பேருத்து வழித்தடத்தில் பேருந்தை இடைமறித்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதுண்டு. அந்த பரிசோதனையில் அரசு பேருந்து நடத்துனரே மாட்டிக் கொண்ட சம்பவம் நேற்று நடைபெற்றது.
சேலம் மெய்யனூர் போக்குவரத்து கிளையில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் நேரு. இவர் நேற்று சேலம் முதல் சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியை தொடங்கினர். அப்போது உமங்கலம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர் பேருந்தை இடைமறித்து டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையாரும்… கார்த்திகை தீப திருவிழாவும்…
அந்த சமயம் தலைவாசல் பகுதியில் இருந்து ஏறி சிதம்பரம் செல்ல பயணிகள் எடுத்திருந்த டிக்கெட்டை பரிசோதர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கொடுத்திருந்த இரண்டு 100 ரூபாய் டிக்கெட் இரண்டு 10 ரூபாய் டிக்கெட் ஆகியவை ஏற்கனவே நடத்துனர் நேருவால் விற்பனை செய்யப்பட்டது என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டை மீண்டும் விற்பனை செய்த சம்பவத்தை கண்டுபிடித்தவுடன் பரிசோதகர்கள் நடத்துனர் நேருவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவரது சரிவர பதில் அளிக்காத காரணத்தால், உடனடியாக அவர் பணி நிறுத்தம் செய்யப்பட்டு வேறு நடத்துனர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது.
இதனை அடுத்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் அவரை விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்டிருந்தார். கான் பிறகு நடத்துனர் நேருவை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து பொது மேலாளர் பொன்முடி உத்தரவிட்டார். இதனை அடுத்து எவ்வாறு ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் மீண்டும் பயணிகளிடம் விற்பனை செய்யப்பட்டது என்றும், போலீ டிக்கெட் தயார் செய்யப்பட்டதா என்றும் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் நடத்துனர் நேருவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.