மக்களுக்கு ஒரு நற்செய்தி! இனிமேல் அமேசான், பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு!
இனிமேல் அமேசான், பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு வீடுகளுக்கு சென்று கேஸ் விநியோகம் வருகிறது. தமிழகத்தில் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அமேசான், பேடிஎம் செயலி மூலம், சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலிகள் மூலம் கேஸ் முன்பதிவு செய்ய, அவற்றில் உள்ள ‘பே பில்’ என்ற பகுதிக்குச் சென்று காஸ் சிலிண்டர் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தைத் தேர்வு செய்து, பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், ஏஜென்சி மூலமாக சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.