அரியர் வைத்த மாணவர்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு..!அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு..!

Default Image

அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் ஓர் பொன்னான வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுபாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கின்ற மாணவர்களுக்கும்,தொலைதூர கல்வியில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று  வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதாவது,வருகிற மூன்று செமஸ்டர் தேர்வுகளிலும் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்பதே ஆகும்.

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி அரியர் வைத்துள்ள பாடங்களில் தேர்ச்சி அடைந்து கொள்ளலாம்.மேலும்,இந்த வாய்ப்பே இறுதி வாய்ப்பாகும்,இதனை தவறவிட்டால் மாணவர்கள் மிகவும் வருத்தப்பட நேரிடும்.ஆகையால் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு அரியர் தேர்வுகளில் வெற்றி பெறுமாறு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்