திருவாரூர் : வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுமி பலி!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் தொடங்கிய மழை மாலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர்மழை காரணமாக மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது.
அதே சமயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தொடர் மழை காரணமாக நேற்று அவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மகள் மோனிஷா (9) உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு சாப்பிட்டு விட்டு மோனிஷா உறங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென சுவர் இடிந்து கீழே விழுந்ததில் மோனிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டு இருந்தார்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மோனிஷா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீட்டின் சுவர் விழுந்ததில் ராஜசேகர் மகன் மோகன் தாஸ் (12) சிறிய காயங்களுடன் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025