ஷூவுக்குள் 2 அடியில் நாக பாம்பு….நூலிழையில் உயிர்தப்பிய 9 வயது சிறுமி
- ஷூவுக்குள் 2 அடியில் நுழைந்த நாக பாம்பு
- நூலிழையில் 9 வயது சிறுமி உயிர்தப்பி உள்ளார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமியான அவந்திகா இன்று காலை பள்ளிச் செல்வதற்கு தினமும் செல்வது போல தயாராகி உள்ளார் செல்வதற்கு முன் தனது ஷூவை கால்களில் அணிய முயன்றுள்ளார்.அப்போது ஷூவுக்குள் இருந்து காலில் எதோ நெளிவது போலவும்,கூடவே சப்தமும் வந்ததால் தனது தாயை அழைத்து தெரிவித்துள்ளார்.
பெற்றோர் வந்து பார்க்கும் போது ஷூக்குள் இருப்பது பாம்பு என்று தெரிய வரவே, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைதது மீது மூடி ,உடனடியாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பாம்பு பிடிப்பவர்கள் வந்து பார்க்கும் போது உள்ளே இருப்பது அதிக விஷத்தன்மைக் கொண்ட 2 அடி நீளமுள்ள நாக பாம்பு என தெரியவந்தது.விஷத்தன்மைக் கொண்ட அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டு விட்பட்டது.
சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்வு குறித்து கூறுகையில் மழைக்காலங்களில் இது போன்ற உயிரினங்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள இது போன்ற இடங்களில் தஞ்சம் மடைய வாய்ப்புள்ளது.எனவே பள்ளிச் செல்லும் மாணவர்களின் ஷூ,சாக்ஸ்க்களை கவனமாக பரிசோதித்த பின்னர் அணிய வேண்டும் என்று பெற்றோர் அறிவுறுத்த வலியுறுத்திகின்றனர்.