நேர்மைக்கு கிடைத்த பரிசு! 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சிறுவன்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிறுவன் முகம்மது யாசின் ஈரோட்டை சேர்ந்தவர். இவர் அரசுப்பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக பள்ளி இடைவேளையில், வெளியில் வந்த போது, அவரது கண்களில் ஒரு சிறிய பை தென்பட்டது. இதனை எடுத்து பார்த்த சிறுவன், அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுள்ளார்.
இதனையடுத்து, அப்பணத்தை அவர் தன்னுடைய ஆசிரியரிடத்தில் கொடுத்துள்ளார். அவர் அப்பணத்தை அச்சிறுவனுடன் சென்று, மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுவனின் இச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இச்சிறுவனின் உயர்கல்வி செலவினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தமிழக அரசின் மாற்றியமைக்கப்பட்ட பாடப்புத்தகத்தில், ஆத்திசூடி என்ற படத்தில், நேர்பட ஒழுகு என்ற தலைப்பில், இச்சிறுவனின் புகைப்படத்துடன் கூடிய, இவரது நற்செயலும், அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.