பெண்களிடம் ஆபாசமாக பேசிய புகார் தொடர்பாக,தேடப்பட்டு வரும் யூ-டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார்.
இதனையடுத்து,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில்,பெண்களை ஆபாசமாக பேசி 100 கணக்கான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,பெண்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும்,புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து,யூ-டியூபர் மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பிரவீன் என்பவரால் புகார் அளிக்கப்பட்டது.
இதனால்,புகார் தொடர்பாக மதனை சைபர் கிரைம் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால்,யூ-டியூபர் மதன் நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிக்க,மொபைல் ஐபி (IP) முகவரி மூலமாக கண்டுபிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இதன்காரணமாக,மதன் வி.பி.என் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வருவதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து,யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை அலுவலகத்திற்கு போலீசார் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அதுமட்டுமல்லாமல்,மதனை பிடித்து,போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில்,யூ-டியூபர் மதன் மீது சென்னை சைபர்கிரைம் காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதனால், தலைமறைவாகவுள்ள மதனை பிடிக்க சைபர்கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…