BigBreaking:தமிழகத்தில் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது..!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கின் போது அனைத்துதனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும், காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரடங்கு காலத்தில் தடை விதிக்கப்ட்டுள்ளது.நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
தமிழகத்தில் வரும் திங்கள் அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ள இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் இரவு 9 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!
March 21, 2025
சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
March 21, 2025