கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பிரியா குடும்பத்திற்கு அரசு வேண்டிய உதவிகளை செய்ததோடு, சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்கனவே, தமிழக முதல்வர்கள், திமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரியாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரியாவின் வீட்டிற்கு சென்று பிரியாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கும் தமிழகத்தில் இவ்வாறு நடைபெற கூடாது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என குறிப்பிட்டார்.
மேலும், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது. வீராங்கனை பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக முழுதாக ஏற்கும். எனவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…